Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுவீச்சு: வன்னியில் சிறிலங்கப் படையினர் அட்டூழியம்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (10:28 IST)
இலங்கையில் உள்ள வன்னி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் இடங்கள் மீது கடந்த சில நாட்களாக வெள்ளை பாஸ்பரஸ் ( white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து கொண்ட எறிகணைகளை பீரங்கிகள் மூலம் சிறிலங்கா படையினர் வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக புதினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வன்னியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் புதிய ரக எரிகுண்டுகளை பீரங்கிகள் மூலம் வீசித் தாக்குகின்றனர்.

இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடங்களில் மனித உடல்களும ், கட்டிடங்களும ், மரங்களும் கூட தீப்பற்றி எரிவதுடன் கடுமையான வெப்பமும், சேதங்களும் ஏற்படுகின்றது.

சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்திய இடங்களை ஆய்வு செய்ததில், அவர்கள் வெள்ளை பாஸ்பரஸ் சேர்க்கப்பட்ட எரிகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக வன்னியில் இருந்து செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தக் கூடாது என்று 1980-களில் உருவாக்கப்பட்ட ஜெனீவா சட்ட விதிகளிலும் ( Under the Geneva Treaty of 1980), அனைத்துலக விதிகளின் அடிப்படையிலும் தடை இருந்தும் அதனை சிறிலங்கப் படையினர் மீறி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments