Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் மருத்துவமனை மீது குண்டுவீச்சு: ஐ.நா கவலை

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (12:39 IST)
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி, எறிகணைத் தாக்குதலுக்கு ஐ.நா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமை விவகாரங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த கோர்டன் வெய்ஸ் கூறுகையில், அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது கடந்த ஞாயிறன்று பலமுறை எறிகணை, வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு செவிலியர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

எந்தத் தரப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், இதுகுறித்து தமிழீழ விடுதலைப்புலிகள், சிறிலங்க அரசாங்கத்திற்கு ஐ.நா அதிருப்தி தெரிவித்துள்ளது என்றார்.

தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனையில் சுமார் 600 நோயாளிகள் இருந்ததாகவும், மேலும் பலர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் மீது கடந்த ஞாயிறன்று தாக்குதல் சிறிலங்க அரசு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

Show comments