ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான்-கி-மூன் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி ஒருநாள் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார்.
இப்பயணத்தின் போது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா சார்பில் சுதந்திர விசாரணைக்குழு அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் டான் நியூஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அயலுறவு செயலர் சல்மான் பஷீர் ஆகியோரை ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஐ.நா அமைதிப்படை அமைப்பதில் பாகிஸ்தானின் பங்களிப்பு, ஐ.நா சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து பாகிஸ்தான் தலைவர்களிடம் பான்-கி-மூன் பேச உள்ளார்.