Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (10:56 IST)
சர்வதேச அளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவர் இசையமைத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர ்’ என்ற படம், ஏற்கெனவே ‘கோல்டன் குளோப ்’ விருது அண்மையில் பெற்றது. இதையடுத்து அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர ்’ படத்தின் பின்னணி இசை அமைப்புக்கும ், 2 பாடல்களுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சிறந்த படத்துக்கான விருதுக்கும ், சிறந்த இயக்குநருக்கான விருதுக்கும் ‘ஸ்லம்டாக் மில்லியனர ் ’ படத்தின் இயக்குநர் டானி பாய்ல் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஜெய் ஹ ோ’ பாடலை எழுதிய குல்சார் பெயரும ், ‘ஓ சாய ா ’ பாடலை எழுதிய மாயா அருள்பிரகாசம் ஆகிய இருவரது பெயரும் சிறந்த பாடலசிரியருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அப்படத்தின் சிறந்த திரைக்கதை அமைப்புக்காக சைமன் பியூஃபாய் பெயரும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்குப் தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments