Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை போரை நிறுத்த வேண்டும்: ஒபாமாவுக்கு அமெரிக்கத் தமிழர்கள் கோரிக்கை

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (11:54 IST)
இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதுடன், தமிழீழம் உருவாகுவதற்கு வழியையும் ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒபாமா ஆட்சிப் பொறுப்பை எடுக்கும் நாளில் ‘ஒபாமாவுக்கான தமிழர்கள ் ’ அமைப்பு அவருக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்து வரும் போரை அமெரிக்காவின் புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்த புதிய அரசு ஆட்சி அமைத்ததும ், தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமெரிக்கா இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழுத்தமான நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் எனவும ், ஒபாமா அதனைச் செய்வார் எனவும் அனைத்துலக தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிப்பதாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments