Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் பராக் ஒபாமா

Webdunia
அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இந்திய நேரப்படி இன்றிரவு 9.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் காண 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைநகர் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.

ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தவரான பராக் ஒபாமா (47) இன்றிரவு 10 மணியளவில் பொறுப்பேற்கிறார். அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அந்நாட்டின் துணை அதிபராக ஜோ பிடென் பொறுப்பேற்றுக் கொள்வார்.

இதற்கிடையில் பதவியேற்பு விழாவுக்கு செல்வதற்கு முன்பாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கும் ஒபாமா அவருடன் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார்.

வாஷிங்டனின் கேபிடல் ஹில் பகுதியில் இன்றிரவு இந்திய நேரப்படி 9.30 மணியளவில் நடைபெறும் இந்த சரித்திரப் புகழ்பெற்ற பதவியேற்பு விழாவைக் காண 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைநகரில் குவிந்துள்ளனர்.

கென்யாவில் கொண்டாட்டம்: கருப்பர் இனத்தவரான ஒபாமாவின் பூர்வீகம் கென்யாவில் உள்ள கொகிலோ ( Kogel o) கிராமம். இன்று ஒபாமா பதவியேற்பதை முன்னிட்டு அந்த கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் ஒபாமாவின் பதவியேற்பை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதில் ஜப்பானில் மட்டும் ஒபாமா உருவத்தைப் போன்ற முகமூடிகள் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments