Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோமாலிய கொள்ளையர்க‌ள் ‌மீ‌ண்டு‌‌ம் அ‌ட்டகாச‌ம்: த‌மிழ‌ர் உ‌ள்பட 3 இ‌ந்‌திய‌ர்க‌ள் கட‌த்த‌ல்

Webdunia
புதன், 14 ஜனவரி 2009 (11:22 IST)
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலு‌மி உ‌ள்பட மூ‌ன்று இ‌ந்‌திய‌ர்களை சோமா‌லிய கட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌ள் கட‌த்‌தி‌ச் செ‌ன்றன‌ர்.

தூத்துக்குடி மரக்குடி தெருவைச் சேர்ந்த பர்னபாஸின் மகன் தெர‌சியா பெ‌ர்னா‌ண்டோ (54). இவர், கென்ய நாட்டு கப்பலில் கேப்டனாக பணிபுரிந்து வருகிறார்.

இதே கப்பலில் பொறியாளராக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சரவணனும், தரக்கட்டுப்பாட்டு அலுவலராக கேரளத்தைச் சேர்ந்த அந்தோனியும் இருந்தனர். இவர்களைத் தவிர கென ்யா நாட்டை சேர்ந்த சி லரு‌ம் இருந்தனர்.

கடந்த 7 ஆ‌ம் தேதி ஏடன் வளைகுடா பகுதியில் இவர்களுடைய கப்பல் சென்றபோது சோமாலிய கடற் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கப்பலை மடக்கினர். பெர்னாண்டோ உள்ளிட்ட 3 இந்தியர்களை மட்டும் கடத்தி சென்றனர்.

இவர்களை விடுவிக்க கப்பல் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து கப்பல் நிறுவனத்தினர் தூத்துக்குடியில் உள்ள தெரசியா பெர்னாண்டோவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் கட‌ல் கொ‌ள்ளைய‌ர்களா‌ல் கட‌த்‌தி‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர், அவ‌ர்களை ‌மீ‌ட்க கோ‌ரி ம‌த்‌திய- மா‌நில அரசுகளு‌க்கு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி தொடங்கிட்டு.. தனி விமானத்துல நடிகை கூட சுத்திக்கிட்டு..! - விஜய்யை விமர்சித்த லியோனி!?

800 பயணிகளை காப்பாற்றிய சம்பவம்! ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில் சேவா புரஸ்கார் விருது!

பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு.!

நாகூர் ஹனிபா நூற்றாண்டு! தெரு, பூங்காவுக்கு பெயர் சூட்டி தமிழக அரசு அறிவிப்பு!

11 ஆண்டுகளுக்கு பின் வருகிறது ஆட்டோ உயர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி..!

Show comments