Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன அழிப்பை நிறுத்துங்கள்: முதல்வருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள்

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (19:52 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் 43,000 ஈழத் தமிழர்களைப ் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவிஸ் தமிழர் பேரவ ை, ஈழத் தமிழர் நலன் கருதி தாங்கள ் மேற்கொண்டு வரும் தன்னலமற்ற பணிகளைப் பாராட்டுகிறது.

ஈழத் தமிழ் மக்களுக்க ு ஆதரவாக இந்திய மண்ணில் இருந்து கொண்டு குரல் கொடுப்பது ஆபத்தானது எனத் தெரிந்த ு கொண்டும ், விளைவைப் பற்றி கவலைப்படாது தொப்புள் கொடி உறவுகளுக்காக ஓங்கிக் குரல ் கொடுப்பது மெய் சிலிர்க்கச் செய்கிறது.

தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவன் என ் சகோதரனே என்ற உணர்வுடன் நீங்கள் ஆற்றுகின்ற பணி ஈழத் தமிழர்களால் என்றும் மறக்கப்ப ட முடியாதது.

தமிழன் வாழாத நாடு இல்ல ை, ஆனாலும் தமிழருக்கு என்றொரு நாட ு இல்லை என்ற இழிசொல்லை மாற்றியமைப்பதற்கா க, ஈழத்தில் உரிமை கோரி போராடும் தமிழ ் மக்களுக்காக இன்று உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்ட ி வருகின்றார்கள். அந்த வரிசையில் தங்களின் வரலாற்றுப் பாரத்திரத்தை நன்குணர்ந்த ு, தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற போரை நிறுத்தி தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்த ு காப்பதற்காக தமிழக சட்டசபையில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானமும ், அதனைத் தொடர்ந்த ு புதுடில்லி சென்று பாரதப் பிரதமரை நீங்கள் சந்தித்துக் கோரிக்கை வைத்ததும் ஈழத ் தமிழ் மக்கள் மனங்களில் பாலை வார்த்தது.

இவற்றை தொடர்ந்த ு, காரியங்கள ் வேகமாக நடக்கும ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்பு செல்வார ், போர ் தற்காலிகமா க நிறுத்தப்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தோம ், ஆனால ், நாம ் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. மாறா க, தமிழ் மக்களின் துன்ப துயரங்கள ் முன்னைவிட அதிகரித்துள்ளன.

இந்திய நடுவண் அரசின் கொள்கையைப் புரிந்த ு கொள்ளவே முடியவில்லை. சமாதான வழிமுறையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்ப ட வேண்டும் என வலியுறுத்தி வரும் இந்திய ா, மறுபுறத்தில் சிங்கள தேசத்திற்குப ் படைத்துறை உதவிகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவ ே, தமிழ ் மக்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள இன்றைய தருணத்தில் தமிழர் தாயகத்தில ் நடைபெறும் இன அழிப்பு போரை உடன் நிறுத்தவும ், இது தொடர்பிலான இந்திய நடுவண் அரசின ் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் மேலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகை ள மேற்கொள்ளுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் பகைவர ் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே! என்று அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments