Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூச்சல்? கீலானி கேள்வி

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (19:43 IST)
மும்பையின் மீது நடந்த தாக்குதலிற்காக இத்தனை கூச்சல் போடும் உலக நாடுகள், காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலிற்கும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் ‘அக்கிரமங்களுக்கும ் ’ வாய் திறக்காதது ஏன் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கராச்சி நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி, “மும்பைத் தாக்குதல் குறித்து மட்டும் இவ்வளவு குரல் கொடுக்கும் உலக நாடுகள், அங்கு பாலஸ்தீனத்தில் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டனர். மும்பையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கிற்கு கொஞ்சமும் குறைவானதல்ல பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஆனால் அப்பிரச்சனையில் உலகம் ஏன் மெளனம் சாதிக்கிறது?” என்று கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.

“பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்திலுள்ள மாரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பல அயல் நாட்டவர்களும், ஒரு தூதரும் கொல்லப்பட்டனர். ஆனால் அதற்கெல்லாம் உலக நாடுகள் ஏதாவது கூச்சல் போட்டனவா? அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த உலகம்? ” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள கீலானி, இரட்டை அளவுகோல் இல்லாத உலகை நாம் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments