Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு.எஸ். ராக்கெட் தாக்குதல்: அல்கய்டாவின் 2 முக்கிய தளபதிகள் பாகிஸ்தானில் பலி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:09 IST)
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ராணுவம் இம்மாதம் நடத்திய தாக்குதலில் அல்கய்டா பயங்கரவாத அமைப்பின் 2 முக்கியத் தளபதிகள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஒருவர் பாகிஸ்தானின் மரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், பாகிஸ்தானில் அல்கய்டாவின் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் உசமா அல்-கினி மற்றும் அவரது உதவியாளரான படைத்தளபதி ஷேக் அகமது சலீம் ஸ்வீடன் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவ நடத்திய ராக்கெட் குண்டுவீச்சில் உயிரிழந்ததாக பயங்கரவாத தடுப்பு அதிகாரி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்றும், கடந்த 1998இல் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அமெரிக்க புலனா‌ய்வு அமைப்பின் முதன்மை குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

மரியாட் நட்சத்திர விடுதியின் மீது கடந்தாண்டு செப்டம்பரில் நடத்திய தாக்குதல், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் உசாமா அல்-கினி தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments