Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்

Webdunia
காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்றும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவின் கிழக்குப் பகுதி மீது நேற்றிரவும், இன்று அதிகாலையும் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், கடந்த 13 நாட்களாக நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் இதுவே மிகவும் உக்கிரமான தாக்குதல் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கான் யூனிஸ் பகுதியை நோக்கி இஸ்ரேல் பீரங்கிப் படைகள் முன்னேறி வருவதால் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

போர் நிறுத்தம் தேவை: காஸா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், தற்போதைய சூழலில் போர் நிறுத்தம் மிகவும் அவசியமானது எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments