Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜ்மல் கஸாப் பாகிஸ்தானியர்தான்: பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (17:28 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில், இந்திய அதிகாரிகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் என அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் நேற்றிரவு அளித்துள்ள பேட்டியில், அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜை என்பதை உறுதி செய்கிறோம். எனினும், அதுதொடர்பான புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதல ் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரத் தொகுப்பில், கஸாப் வாக்குமூலமும் அடங்கியுள்ளது. எனினும், அதனைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், கஸாப் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது எனக் கூறியதுடன், அவர் பாகிஸ்தான் பிரஜை அல்ல என்றும் தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில், கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை அந்நாட்டு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கஸாப்புக்கு சட்ட ரீதியான உதவிகளை பாகிஸ்தான் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

Show comments