Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸாப் விவகாரம்: ‌பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி நீக்கம்

Webdunia
மும்பைத் தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் எனத் தெரிவித்த காரணத்திற்காக, அந்நாட்டுப் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை பிரதமர் யூசுப் ரஸா கிலானி பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில், கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை தன்னிடமும் (கிலானி), பிற முக்கிய அரசு தலைவர்களிடம் கூறாமல் நேரடியாக அதனை அறிவித்தது பெரும் தவறு. இதன் காரணமாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹ்மூத் அலி துர்ரானியை பதவி நீக்கம் செய்துள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு பிரதமர் கிலானி அளித்துள்ள பேட்டியில், துர்ரானியின் பொறுப்பற்ற செயல் காரணமாக பாகிஸ்தான் மீதான உலக நாடுகளின் பார்வையும், அரசு கொள்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

துர்ரானியை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியும் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

Show comments