Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸாவில் ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (13:44 IST)
காஸா பகுதியில் ஐ. நா நடத்தி வந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி நேற்று நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் ஜபால்யா அகதிகள் முகாமில் உள்ள அல்-ஃபகோரா பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அங்கே தங்கியிருந்த நிலையில் பள்ளிக்கு அருகே வீசப்பட்ட 2 குண்டுகள் வெடித்ததில் பள்ளியின் உள்ளே, வெளியே இருந்த ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஐ.நா.வின் நிவாரணப் பணி மையம் சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு பள்ளியின் மீது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 75 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம ், காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 620 பேர் உயிரிழந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments