Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸா மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பே காரணம்: அதிபர் புஷ்

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (12:37 IST)
இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியது பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இதுவே காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலுக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மக்களிடம் வானொலியில் நேற்று உரையாற்றிய போது இதனை தெரிவித்த புஷ், கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளின் நிலையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஏராளமான துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பு இறக்குமதி செய்துள்ளதாகவும் கூறினார்.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே எகிப்து ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்த ை மீறிய ஹமாஸ், அப்பாவி இஸ்ரேல் மக்களை ராக்கெட் குண்டுகள் வீசி கொன்று குவித்ததாகவும், இத்தாக்குதலை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததையும் புஷ் தனது உரையில் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் புஷ் அப்போது கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments