Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹ்மான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: பாக்.கிற்கு யு.எஸ். நெருக்குதல்

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (16:16 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஈ-தயீபா தளபதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியுடன், லக்வி பேசிய தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிநாடாவை அமெரிக்கர்கள், பாகிஸ்தான் அரசிடம் அளித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பாகிஸ்தானில் வெளியாகும் டான் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், பாகிஸ்தானிடம் ஒலிநாடாவை வழங்குவதற்கு முன்பாக அமெரிக்க வல்லுனர்கள் அதனை பரிசோதித்ததாகவும், அதில் பேசியது லக்வி என்றும் உறுதி செய்து கொண்டதாக தூதரக வட்டாரத் தகவல்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள லக்வியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினாலும், அவ்விவகாரத்தில் கடந்த வாரம் வரை எந்த நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாத அமெரிக்கா, தற்போது லக்வி பேசிய ஒலிநாடாவை பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிடம் லக்வியை ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதாக வாஷிங்டனில் உள்ள தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மும்பை தாக்குதலில் இந்தியர்களால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப்பும், லக்வியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments