Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச தேர்தல் முடிவை ஏற்க முடியாது: கலிதா ஜியா

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (12:35 IST)
வங்கதேசத்தில் வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டு தேசியவாதக் கட்சியின் தலைவர் கலிதா ஜியா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு துவங்கி நள்ளிரவு வரை நடந்த கட்சியின் நிலைக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த கலிதா ஜியா, ஏற்கனவே திட்டமிட்ட வெற்றியைப் பெறும் வகையில் தேர்தலை நடத்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் என கேலியாகக் கூறினார்.

தேர்தல் முடிவுகளை ஏற்கனவே திட்டமிட்ட எதிர்க்கட்சியினர் அதனை எப்படி செயல்படுத்தினர் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் கலிதா ஜியா சாடினார்.

வங்கதேசத் தேர்தல் நியாயமான முறையில் நடந்ததுதான் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும், அயல்நாட்டு தேர்தல் பார்வையாளர்களும் கூறியிருந்த நிலையில், கலிதா ஜியா நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளது அந்நாட்டு அரசியல் மட்டத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 85% அதிகமான வாக்குகள் பதிவானது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், தேர்தல் நடத்தப்பட்ட 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி-லீக் கட்சி தலைமையிலான கூட்டணி 262 இடங்களைப் பிடித்து அபார வெற்றி பெற்றது.

எனினும், கலிதா ஜியாவின தேசியவாதக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 32 இடங்களே கிடைத்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments