Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் விமானப்படை தீவிர பயிற்சி

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (18:51 IST)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவ விமானங்கள் இன்று தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று மதியம் விமானப்படை விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக அந்நாட்டு விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் செஃபைர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டே, விமானப்படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை முறியடிக்கத் தேவையான அனைத்து வழிகளையும் இந்தியா கையாளும் என இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் விமானப்படை பயிற்சியை முக்கிய நகரங்களில் துவக்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர சத்யப்பிரதா பால் டெல்லியில் இன்று துவங்கிய இந்திய தூதர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். அதே தருணத்தில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் அலுவல்கள் தொடர்பாக இஸ்லாமாபாத் சென்றுள்ளதால் இவ்விடயம் குறித்து இருவரும் இன்னும் தங்களது கருத்துகளை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Show comments