Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசுக் குழு உறுப்பினர்கள் மீது லஞ்சப் புகார்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (19:02 IST)
நோபல் பரிசுத் தேர்வுக்கு குழுவின் இடம்பெற்றுள்ள சில உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேதியியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசைத் தேர்வு செய்யும் குழுவில் உள்ள பலர் சீன அதிகாரிகளின் நிதியுதவியுடன் சீனா சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஸ்டாக்ஹோமில் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரி நில்ஸ் எரிக் தெரிவித்தார்.

நோபல் பரிசுக் குழுவினரை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிகாரிகள் அழைப்பு விடுத்ததன் நோக்கம் குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளில் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு குற்றச்சாட்டில் ஏங்லோ-ஸ்வீடன் மருத்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா செனிகா, இந்தாண்டின் துவக்கத்தில் நோபல் அறக்கட்டளையில் இணைந்துள்ள நோபல் வெப், நோபல் மீடியா ஆகியவற்றிற்கு நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமான ஹுமன் பப்பில்லோமா வைரஸ் கிருமியை கண்டறிந்ததற்காக ஹரால்ட் ஜுர் ஹௌஸனுக்கு இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

ஹுமன் பப்பில்லோமா வைரஸ் ( human papilloma viru s) நோயை குணப்படுத்த உதவும் 2 மருந்துகளும் அஸ்ட்ரா செனிக ா (Astr a Zenec a) நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை என்பதால், நோபல் பரிசு அறிவிப்பில் அந்நிறுவனத்தின் தலையீடு ஏதும் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி நில்ஸ் எரிக் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments