Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெர்ஸன் ஆஃப் தி இயர்-2008: ஒபாமா தேர்வு

Webdunia
அமெரிக்காவின் 44வது அதிபராக பொறுப்பேற்க உள்ள பராக் ஒபாமா, அந்நாட்டின் டைம் வார இதழின் ‘பெர்ஸன் ஆஃப் தி இயர்-2008’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரச் சிக்கலில் சிக்கி ஒட்டுமொத்த அமெரிக்காவும் உற்சாகமற்ற சூழலில் காணப்பட்ட தருணத்தில், அதிபர் தேர்தலில் சிறப்பாக திட்டம் வகுத்து நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதற்காக அவருக்கு இப்பட்டம் வழங்கப்படுவதாக டைம் இதழ் ( Time magazin e) தெரிவித்துள்ளது.

ஒபாமாவுக்கு அடுத்தபடியாக 2008ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்கள் வரிசையில், அமெரிக்க கருவூல செயலர் ஹென்றி பால்ஸன், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பாலின், 2008 பீஜிங் ஒலிம்பிக்கின் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளின் இயக்குனரான சீனாவின் ஷாங் யிமோவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments