Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாலியில் கடும் மோதல் : 40 படையினர் பலி, 120 பேர் காயம்

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:24 IST)
யாழ்ப்ப ாண‌த்தையடு‌த்த கிளாலியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்திற்கும் இடையே நடந்த கடும் மோதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

இத்தகவலை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளம் கூறியுள்ளது.

கிளாலி பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிறிலங்க தரைப்படையின் 53வது பிரிவு முன ் நகர்வை மேற்கொண்டதாகவும், அவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10.30 மணி வரை நடந்த இம்மோதலில் சிறிலங்க படையினர் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்தாகவும், 120க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும், பதில் தாக்குதலையடுத்து சிறிலங்க படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மோதலில் உயிரிழந்த சிறிலங்க படையி ன‌ர ் சிலரின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments