Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக ஒபாமா தேர்வு

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:03 IST)
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

திங்களன்று நடந்த சம்பிரதாய வாக்கெடுப்பில் கொலம்பியா மாவட்டம் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 538 தேர்தல் தொகுதிகளின் ( Electoral Colleg e) உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு ஆதரவாக 365 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 173 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அந்நாட்டின் புதிய அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இன்று நடந்த சம்பிரதாய வாக்கெடுப்புக்கு பின்னரே அவர் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments