ரஷ்யாவைச ் சேர்ந் த சென்ய ா சுகிநோவ ா 2008 ஆம ் ஆண்டுக்கா ன உல க அழகியா க தேர்ந்தெடுக்கப்பட்டார ். இந்தியாவின ் சார்பில ் போட்டியில ் கலந்த ு கொண்ட பார்வதி ஓமன குட்டன் 2-ம ் இடம் பிடித்தார்.
58- வது உலக அழகி போட்டி தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்றிரவ ு நடைபெற்றது. இந்தப ் போட்டியில ் இந்தியாவின ் சார்பில ் கேர ள மாநிலம ் கோட்டயத்தைச ் சேர்ந்த பார்வதி ஓமனகுட்டன் உள்ளிட்ட 100-க்க ு ம ் மேற்பட்ட நாடுகள ை ச ் சேர்ந்த அழகிகள் கலந்த ு கொண்டனர்.
இதன ் இறுதிப ் போட்ட ி நேற ் றிரவு நடைபெற்றத ு. இறுதிப்போட்டியில் பங்கேற்ற 5 அழகிகளில், இந்திய அழகி பார்வதியும் இடம் பெற்று இருந்தார்.
இப்போட்டியில ், ர ஷ்யாவின் சென்ய ா சுகிநோவா உலக அழகியா க தேர்ந்தெடுக்கப்பட்டதா க போட்டியின் தேர்வுக்குழு தலைவரான ஜுலியா மொர்லி அறிவித்தார். இந்தியாவின ் பார்வத ி ஓம ன குட்டன ் ( வயது 21) 2-வத ு இடத்தையும ், டிரினிடாட ் டொபாக ா நாட்டைச ் சேர்ந் த கேபிரியல ் வால்காட ் 3- வத ு இடத்தையும ் பிடித்தனர ்.
இதனைத ் தொடர்ந்து சென்யாவுக்கு உலக அழகி கிரீடம் அணிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் நடந்த உலக அழகி போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த ரீட்டா ஃபாரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோர் உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.
நூலிலையில் உலக அழகி வாய்ப்பைத் தவற விட்ட பார்வதி, 'மிஸ் மலையாளி 2005', 'மலையாளி மங்கா 2005', 'கடற்படை ராணி' - கொச்சி (2006), 'கடற்படை ராணி' -விசாகப்பட்டினம் (2007) போன்ற பல்வேறு அழகி பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.