Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைத் தாக்குதலிற்கு ஐ.எஸ்.ஐ. உதவியது!

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (16:38 IST)
மும்பை நகரில் ஊடுறுவி லஸ்கர் ஈ தயீபா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முழு அளவிற்கு உதவியுள்ளது என்று அமெரிக்க உளவு கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மும்பையை தாக்குவதற்குத் தேவையான விவரங்களை அளித்தது மட்டுமின்றி, அதில் ஈடுபட்ட லஸ்கர் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, தேவையான நிதி, பாதுகாப்பு ஆகியவற்றையும் ஐ.எஸ.ஐ. அளித்தது என்று அமெரிக்க உளவு அமைப்பின் செயல்பாட்டை கண்காணிக்கும் ( Counter Intelligence uni t) தனிப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்ததாக நியூ யார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ.ஐ. அமைப்பின் உதவியினாலேயே லஸ்கர் அமைப்பு பலம் பெற்ற பயங்கரவாத அமைப்பாக வளர்ந்துள்ளது என்றும், ஐ.எஸ்.ஐ.க்கும் லஸ்கருக்கும் இடையே ஜரார் ஷா என்ற பயங்கரவாதி செயல்பட்டதாகவும், மும்பைத் தாக்குதலின் மையமாக இந்த பயங்கரவாதி செயல்பட்டுள்ளார் என்றும் அந்த அதிகாரி கூறியதாக அந்த நாளேடு கூறியுள்ளது.

ஆயினும் மும்பைத் தாக்குதலிற்கும், பாகிஸ்தான் அரசிற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ள அந்த அதிகாரி, லஸ்கர் ஈ தயீபா அமைப்பின் பலத்தை அமெரிக்க உளவுப் பிரிவு மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments