Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதம்: பாக். 10 பில்லியன் டால‌ர் விரயம்!

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (13:30 IST)
அமெரிக்காவின் ஆப்கான் கொள்கை குறித்த ஆய்வறிக்கையை தயாரித்து வரும் புஷ் நிர்வாகம், பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா அளித்த 10 பில்லியன் டாலர்கள் தொகையை பாகிஸ்தான் விரயம் செய்துள்ளது என்று கூறியுள்ளதாக பத்திரிக்கை செய்தி ஒன்று கூறியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இது குறித்து வெளியாகியுள்ள செய்தியறிக்கையில் புஷ் நிர்வாகத்தின் ஆப்கான் கொள்கை குறித்த அறிக்கை பதவியேற்கவுள்ள பாரக் ஒபாமா நிர்வாகத்திடம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தாங்கள் கேட்ட அனைத்தையும் பாகிஸ்தான் செய்து வந்ததாக அமெரிக்கா இதுகாறும் கூறிவந்தது, ஆனால் உண்மை என்னவெனில் 10 பில்லியன் டாலர்கள் இதற்காக அளிக்கப்பட்டும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான அடிப்படைத் திறன் ஊட இல்லை என்றும், இந்த நிலை மாறவேண்டும் என்று ஒபாமா நிர்வாகத்திடம் தெரிவிக்கவுள்ளதாகவும் இந்த அறிக்கையை தயாரித்த குழுவில் புஷ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாக இந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில காலமாகவே ஒபாமா நிர்வாகத்தின் முன்னணி தலைவர்களும், துணை அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடெனும் இதனை தெரிவித்து வந்துள்ளதாக அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

பைடன் துணை அதிபராக தேர்வு செய்யப்படும் வரை அமெரிக்க நாடாளுமன்ற அயலுறவு கொள்கைகள் குழுவின் தலைவராக இருந்த போது பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா அளித்து வந்த தொகைகளை இந்தியாவிற்கு எதிராக தனது ராணுவ பலத்தை அதிகரிக்கவே பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது என்று கூறிவந்துள்ளதாக இந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புஷ் நிர்வாகத்தின் இந்த ஆப்கான் கொள்கை குறித்த அறிக்கை மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னால் வரையப்பட்டது, தற்போது இந்த தாக்குதல் குறித்த விவரங்களும் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments