Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவின் புதிய பிரதமர் ஸ்டீபனி டியான்

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:23 IST)
கனடாவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்ததால், சிறுபான்மை அரசின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஸ்டீபனி டியான் என்பவரை எதிர்க்கட்சிகள் புதிய பிரதமராக தேர்வு செய்துள்ளன.

கனடா எதிர்க்கட்சிகளான தேசிய ஜனநாயக கட்சியும், லிபரல் கட்சியும் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு மற்றொரு எதிர்க்கட்சியான கியூபிகோஸிஸ் பிளாக் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணி உடன்பாட்டின்படி லிபரல் கட்சியின் தலைவர் ஸ்டீபனி டியான் அடுத்தாண்டு மே மாதம் வரை அந்நாட்டு பிரதமர் பதவியில் இருப்பார் என்றும், அதன் பின்னர் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள டியான், ஆட்சி அமைக்க அனுமதி கோரி அந்நாட்டு கவர்னர் ஜெனரலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் புதிய உடன்பாடு 2011 ஜூன் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என்றாலும், 2010 ஜூன் வரையே இக்கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என கியூபிகோஸிஸ் பிளாக் கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments