Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: காண்டலீசா ரைஸ்!

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (18:25 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் அரசு முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.

நாளை மறுநாள் இந்தியா வரவுள்ள காண்டலீசா ரைஸ், தற்பொழுது இங்கிலாந்து தலைநகர் லண்டனிற்கு வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரைஸ், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் எங்கே சென்றாலும் அதனை பாகிஸ்தான் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும், இதில் இந்தியாவிற்கு அந்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“இது தொடர்பாக எந்த முடிவிற்கு இப்போது வருவதற்கில்லை. ஆனால், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வில் பாகிஸ்தான் (அரசு) வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும ்” என்றும் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments