Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவுவோம்: இந்தோனேஷியா

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (17:40 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும், அதனைக் கட்டுப்படுத்துவதிலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்போம் என இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசினார்.

இரு நாட்டு உயரதிகாரிகள் அளவிலான கூட்டத்திற்கு பின்னர் பிரதீபா பாட்டீல்-சுசிலோ பம்பாங் இருவரும் பேச்சு நடத்தினர்.

அப்போது 200க்கும் அதிகமானோரை பலி கொண்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுசிலோ, அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இந்தோனோஷியா எதிரானது என்றும், அது (பயங்கரவாதம்) உலகின் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதால் அதனை ஒடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கும் இந்தோனேஷியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் பிரதீபாவிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதீபா பாட்டீல், வியட்நாம் நாட்டிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு 28ஆம் தேதி சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கிய அவர் இன்று ஜகர்த்தாவில் அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments