Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள்?

Webdunia
ஞாயிறு, 30 நவம்பர் 2008 (15:46 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் பாகிஸ்தான் படையினர் சுமார் 1 லட்சம் பேரை இந்திய எல்லைக்கு மாற்றுவது குறித்து பாகிஸ்தான் யோசித்து வருகிறது.

இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்த்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்க உள்ளோம் என்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் துவக்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், தற்போது, இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிறிது பதற்றம் நிலவுவதாகவும் ஒரு உய‌ர் அ‌திகா‌ரி கூ‌றினா‌ர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் எல்லைகளில் இருக்கும் அனைத்து படைகளும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தவும் திட்டமிட்டு வர ு‌கிறோ‌ம் எ‌ன்று‌ம், தாலிபான்களுக்கு எதிரான போரில் சுமார் 90,000 முதல் ஒரு லட்சம் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற ு‌ம ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அனுப்பப்பட்டு அங்கு தாலிபான் மற்றும் அல் கய்டா பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எங்களுக்கு மிக முக்கியம் அல்ல என்று ஒரு உயர் அதிகாரி கூறினார்.

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

Show comments