Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடன் வளைகுடாவில் 25 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (19:03 IST)
ஏ டன் வளைகுடா அருகே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலில் 25 இந்தியர்கள் உள்ளதாக மும்பையில் உள்ள கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள லிபிரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயனம் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் நேற்று கடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த 25 இந்தியர்கள் உட்பட 31 சிப்பந்திகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

இந்தோனேஷியாவின் துமாய் துறைமுகத்தில் இருந்து ஐரோப்பா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது ஏடன் வளைகுடா அருகே சோமாலிய கடற்கொள்ளையர்கள் அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் சர்வதேச கடல்சார் வாரியத்தின் கடத்தல் தடுப்பு தகவல் குழு ஆகியவற்றிற்கு உதவி கோரி செய்தி அனுப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments