Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாக். இணையவழி யுத்தம்: “ஹேக்கர்”கள் கைவரிசை!

Webdunia
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அரசு நிறுவனங்களின் இணையதளங்களை பாழ்படுத்தும் வேலையில் இரு நாடுகளைச் சேர்ந்த “ஹேக்கர ் ”கள் ( hacker s) தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் தகவல்களை திருடும் களவுப் பணியில் ஹேக்கர்ஸ் ஈடுபட்டாலும், அதிலும் அவர்களது தேசப்பற்றை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் இணையவழி யுத்தம் (ஹேக்கர் பிரச்சனை) நவம்பர் மத்தியில் துவங்கியது. முதலில் இந்தியாவைச் சேர்ந்த கார்ட்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ( Guards of Hindusta n) என்ற ஹேக்கர் குழுவினர் பாகிஸ்தானின் எண்ணெய், எரிவாயு கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கினர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் ஆர்மி ( Pakistan Cyber Arm y) ஹேக்கர் குழுவினர், இந்தியாவின் எண்ணெய், இயற்கை எரிவாயுக் கழகத்தின் ( ONG C) இணையதளத்தை நேற்று முடக்கினர்.

இதேபோல் இந்திய ரயில்வே, ரட்லம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களும் சைபர் ஆர்மி ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அந்த 3 தளங்களுக்கும் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையறிந்த கார்ட்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ஹேக்கர் குழுவினர் உடனடியாக ONG C இணையத்தை உடனடியாக மீட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் மீண்டும் செயல்பட வைத்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments