Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதத்தை முதலில் பிரயோகிக்க மாட்டோம்: சர்தாரி!

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2008 (17:10 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் விதமாக, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத்தை பாகிஸ்தான் முதலில் பயன்படுத்தாது என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த தலைவர்கள் மாநாட்டில், இணையதள வீடியோ தொழில்நுட்ப உதவியுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து உரையாடிய போது அதிபர் ஜர்தாரி இதனைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து அமைதியும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையிலான செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள உள்ளேன். பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரிடமும் இந்தியாவைப் பற்றிய சிறிய அக்கறையும், இந்தியர்கள் ஒவ்வொருவரிடமும் பாகிஸ்தான் பற்றிய அக்கறையும் உள்ளது.

இந்தியாவைவிட 10ல் ஒருமடங்கு அளவே உள்ள பாகிஸ்தானிற்கு, இந்தியாவால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று நான் கருதவில்லை. அதேபோல் பாகிஸ்தானால் எந்தவித அச்சுறுத்தலும் இந்தியாவுக்கு ஏற்படாது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments