அடுதத இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை தாம் தயாரித்து வருவதாக வானொலி ஒன்றுக்கு அளித்த உரையில் புதிய அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
PTI Photo
FILE
அந்நாட்டில் நேற்று ஒளிபரப்பான இந்த உரையில், சாலைகள், பாலங்களை சீரமைப்பது, பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, எரிசக்திக்கு தேவையான மாற்று வழிகளை மேம்படுத்துவது, கார்களின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் திட்டம் தீட்டி வருவதாக ஒபாமா கூறியுள்ளார்.
உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க திடமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும், அனைத்து சவால்களையும் சமாளித்து வலுவான பொருளாதாரத்துக்கு வித்திடுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஜனநாயக கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரும் அரசின் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்க உள்ளார்.