Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்-கய்டா அமைப்பு விரைவில் ஒழியும்: யு.எஸ் புலனாய்வு அறிக்கை!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (15:36 IST)
சர்வதேச அளவில் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு விரைவில் ஒழிந்துவிடும் என அமெரிக்க உளவு நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அல்-கய்டா மீது முஸ்லிம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. மேலும், அந்த அமைப்பினரின் வெளியில் வராத செய்திகள் மூலம் அது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது என்று புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அல்-கய்டா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து ஆதரவை இழந்து வந்தாலும், மீதமுள்ள அதிபயங்கர தீவிரவாதிகளின் கைகளில் உயிரி ஆயுதங்கள் உள்ளிட்ட அழிவுப் பொருட்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“2025இல் சர்வதேச போக்கும் மாறிய உலகமும ் ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், உலகின் ஆதிக்க சக்தி என்ற அந்தஸ்தில் இருந்த அமெரிக்காவின் நிலை மாறி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அந்த இடத்தைப் பிடிக்கும் வகையில் முன்னேற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கசப்பான விஷயம் என்றாலும் அல்-கய்டா அமைப்பு விரைவில் ஒழியும் என்று திடமாக கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது என அமெரிக்காவில் வெளியாகும் “நியூயார்க் டைம்ஸ ் ” நாளிதழ் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments