Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்க அரசு தயாராகி வருகிறது: மங்கள சமரவீர!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (13:40 IST)
புதுடெல்லி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்க அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான தருணத்தை அதிபர் ராஜபக்ச எதிர்பார்த்த வண்ணமிருப்பதாகவும் சிறிலங்க நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரர் ஃபசில் ராஜபக்சவும் இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் உண்மையான விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளியிடவில்லை என்று கூறியுள்ள மங்கள சமரவீர, போரின் மூலம் எந்தப் பலனும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

கொழும்புவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது மங்கள சமரவீர இவ்வாறு கூறியதாக அங்கிருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

“பூநகரி வெற்றியை தனது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கான உத்தியாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்தப் போகின்றார். டிசம்பர் 9ஆம் தேதிக்குப் பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதனை நான் உறுதியாகக் கூறுகின்றேன ்” என்று பேசியுள்ள மங்கள சமரவீர, “15 வருடங்களுக்கு முன்னர் 1993ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாளும் விடுதலைப் புலிகளிடமிருந்து பூநகரி கைப்பற்றப்பட்டது. அப்போதும், புலிகள் தப்பியோடுவதாக அரச ஊடகங்கள் பெரிதாக ஆர்ப்பரித்தன. பின்னர் என்ன நடந்தது? அடுத்தடுத்து பெரும் இழப்புகளை அரச படையினர் சந்தித்தனர். இன்னும் எவ்வளவு தூரம் படையினர் முன்னேறினாலும்கூட இந்தப் போரில் முழுமையான வெற்றியைப்பெற முடியாது. இதனை மகிந்த ராஜபக்ச உணர்ந்தே இருக்கிறார ்” என்று கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் செய்யப்படுவதனை தாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம் என்றும் போர் நிறுத்தத்தினை செய்து அடுத்த பணியாக சமகாலத்தில் அரசியல் தீர்வு யோசனையே அரசு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்க இராணுவத்தினரின் 250 சடலங்கள்!

இந்த வாரத்தில் மட்டும் போர் முனையில் கொல்லப்பட்ட 250 சிறிலங்க இராணுவத்தினரின் உடல்கள் ஜயரட்ன மலர்ச்சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய மங்கள சமரவீர, காயமுற்ற 235 இராணுவத்தினர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும், 85 பேர் களுபோவில மருத்துவமனையிலும், 90 பேர் ஜயவர்த்தனபுர மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்ட மங்கள சமரவீர, இந்த உண்மைத் தகவல்களை பாதுகாப்புத் துறை வெளியிடாமல் மறைத்து வருகின்றது என்று கூறினார்.

“நாட்டு மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். போர் மாயையில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு பகீரதப் பிரயத்தனத்தில் அரசு ஈடுபாடு காட்டி வருகின்றது. அதில் வெற்றி காண முடியாது என்பதை உணர்ந்ததால்தான் போரையே காரணமாக வைத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலிற்கு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார ்” என்று மங்கள சமரவீர கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments