Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியப் பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி: இந்திய-ரஷ்ய கடற்படை தயாராகிறது!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (13:31 IST)
இந்தியப் பெருங்கடலில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் இந்த்ரா-2009 கடற்படை கூட்டுப்பயிற்சியில், ரஷ்ய-இந்திய கடற்படைகள் பங்கேற்கின்றன.

இதுகுறித்து ரஷ்ய கடற்படை செய்தித் தொடர்பாளர் ரோமன் மர்டோவ் அந்நாட்டு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பசிபிக் பகுதியில் இருந்து வர்யுக் என்ற ஏவுகணை தாங்கிக் கப்பல் தலைமையில் ஒரு கடற்படைப் பிரிவு டிசம்பரில் இந்தியப் பெருங்கடல் நோக்கி பயணிக்க உள்ளது. அப்பிரிவு இந்திய கடற்படை ராணுவத்துடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள பீட்டர்-தி-கிரேட் ( Peter-the-Great) என்ற அணு ஏவுகணை தாங்கிக் கப்பலும், இப்பயிற்சியில் பங்கேற்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமாலியா கடற்பகுதி, ஏடன் வளைகுடாப் பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய-ரஷ்ய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments