Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தேர்தல் மக்களின் மனநிலையை பிரதிபலிக்காது: பாக்.

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (11:37 IST)
ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அம்மாநில மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கும் என்று கருதக் கூடாது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகம்மது சாதிக், காஷ்மீர் மக்களின் உண்மையான மனநிலையை தற்போது நடந்து வரும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வெளிப்படுத்தும் என கருதக் கூடாது என்றார்.

எல்லை வணிகம் குறித்த கேள்விக்கு, வர்த்தக பரிமாற்றத்தை மட்டுப்படுத்தும் விவகாரங்களை தவிர்க்க இருதரப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக பதிலளித்தார்.

தீவிரவாதிகள், பிரிவினை அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பலத்த பாதுகாப்புடன் அம்மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடும் பனிப்பொழிவையும் மீறி முதற்கட்ட தேர்தலில் ஏராளமானோர் ஆர்வமாக வாக்களித்ததன் காரணமாக 55% வாக்குகள் பதிவான நிலையில், பாகிஸ்தான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments