Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்கா கடற்படை தாக்குதல்: புலிகள் முறியடித்தனர்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (17:56 IST)
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்க ி சிறிலங்கா கடற்படையினரின் கமாண்டோ பிரிவினர் இன்று நடத்திய தாக்குதலை தமிழீ ழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் படை முறியடித்துள்ளது. இதில் கடற்படையினரின ் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கூறியிருப்பதாவது, “கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோக்கள் தமது நவீன அதிவேக ஆர ோ படகுகளிலும் நீருந்து விசைப்படகுகளிலும் வந்து தாக்குதல் நடவடிக்கையை இன்ற ு செவ்வாய்க்கிழமை காலை 6:15 நிமிடத்துக்கு நடத்தினர்.

இரண்டு நீருந்து விசைப்படகுகளும் 12 ஆரோப் படகுகளும் இத்தாக்குதல் நடவடிக்கையில ் ஈடுபட்டன. இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா தரைப்படையினர் எறிகணைத் தாக்குதலை நடத் த, வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகிய ன இணைந்து தாக்குதலை நடத்தின. இதற்கு மத்தியில் கடற்புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

கடற்புலிகளின் எதிர்த்தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோக்கள ் பெரும ் இழப்புக்களை சந்தித்துள்ளனர். சுமார் 45 நிமிடம் வரை நடைபெற்ற மோதலையடுத்து மூன்று சிறப்பு படகுகள் சேதமாகி ய நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

கடற்புலிகள் எதுவித இழப்புக்களும் இன்றி தளம் திரும்பியுள்ளனர ்” என்று விடுதலைப ் புலிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments