Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானுக்கு ராணுவம் அனுப்பப்படாது: சீனா திட்டவட்டம்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (11:12 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச படைகளுக்கு ஆதரவாக சீன ராணுவமும் அங்கு குவிக்கப்படும் என்ற செய்திகளை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து சீன அயலுறவு அமைச்சக இணையதளத்தில் செய்தித் தொடர்பாளர் கின்-காங் நேற்று வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பில், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தவும ், பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு சீனா ஆதரவு அளிக்கும்.

ஆப்கானிஸ்தான் மீதான சீனாவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேபோல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவுப்படி மட்டுமே அயல்நாடுகளுக்கு சீனா ராணுவத்தை தனது ராணுவத்தை அனுப்பும் என்பதிலும் மாற்றமில்லை.

எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச கூட்டு ராணுவப் படைகளுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானுக்கு சீனப் படைகளை அனுப்பப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என கின்-காங் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த வாரம் வெள்ளியன்று நடந்த நியூயார்க் அயலுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கார்டன் பிரவுன் பதிலளித்துப் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து நிலவுவதால், அங்கு போராடி வரும் சர்வதேச கூட்டு ராணுவப் படைகளுக்கு ஆதரவாக சீனா தனது படைகளை அனுப்பலாம் எனக் அப்போது கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments