Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அயலுறவு அமைச்சராக ஹிலாரிக்கு வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (17:00 IST)
சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமாவின் தலைமையில் அமையும் புதிய அரசின் அயலுறவு அமைச்சர் பதவி ஹிலாரி கிளிண்டனுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

PTI PhotoFILE
தனது அரசில் இடம்பெறத் தகுதியான அதிகாரிகள், அமைச்சர்களை தேர்வு செய்வதற்காக ஒபாமா அமைத்துள்ள குழுவிற்கு நெருக்கமான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, ஜனநாயகக் கட்சிக்கான அதிபர் வேட்பாளர் தேர்வில் ஒபாமாவை எதிர்த்து கடுமையாக போராடியவர். இருவரில் யாருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது இறுதிவரை இழுபறியாகவே காணப்பட்ட நிலையில், ஒபாமா போராடிப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஹிலாரிக்கு புதிய அரசின் அயலுறவு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான செய்திகள், உடனடியாக பரபரப்பை இழந்தன. ஆனால், முன்னாள் அதிபர் கிளிண்டனுக்கு தனது தலைமையின் கீழ் அமையும் அரசில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என ஒபாமா அறிவித்ததைத் தொடர்ந்து, ஹிலாரிக்கு அமைச்சர் பதவி செய்தி சூடுபிடித்தது.

எனினும், ஒபாமா மற்றும் அவர் அமைத்துள்ள அதிகாரிகள் தேர்வுக் குழுவினருக்கு கோபம் ஏற்படுத்தாத வகையில், ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் இருவர் தங்கள் கருத்தை கடந்த வியாழனன்று சூசகமாக வெளிப்படுத்தினர்.

குடியரசுக் கட்சியின் நெப்ராஸ்கா மாகாண செனட் உறுப்பினர் சக்-ஹேகல், மசாசூசெட்ஸ் மாகாண ஜனாநாயக கட்சி செனட் உறுப்பினர் ஜான் கெர்ரி, நியூ மெக்ஸிகோ ஜனநாயகக் கட்சி ஆளுநர் பில் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் அயலுறவு அமைச்சக பதவிக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments