Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா வெற்றியால் நாளிதழ் விற்பனை அமோகம்!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (16:03 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் கருப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றதால் அந்நாட்டு தினசரி நாளிதழ்கள் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 4ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதுகுறித்த முழுவிவரம் அந்நாட்டு நாளிதழ்களில் இன்று பிரசுரமானது. ஒபாமா படத்துடன் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்ட செய்தியை உள்ளடக்கிய இன்றைய நாளிதழை வாங்க ஏராளமானோர் அதிகாலையிலேயே முற்பட்டதால் அனைத்து இடங்களிலும் நாளிதழ்கள் விற்றுத்தீர்ந்தன.

இதையடுத்து “தி வாஷிங்டன் போஸ்ட ் ” நாளிதழ் அலுவலகம் முன்பு 400க்கும் அதிகமான மக்கள் வரிசையில் நின்று சிறப்பு பதிப்பைப் பெற காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்நாளிதழ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதால் நாளிதழ் விற்பனை அதிகரிக்கும் என்று வழக்கமாக பிரசுரிப்பதை விட 30% நாளிதழ்கள் கூடுதலாக (2.5 லட்சம்) பிரசுரிக்கப்பட்டது. எனினும் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ராணுவ வீரரான வெர்னன் ஷார்ட் (வயது 68) கூறுகையில், எனக்கு 2 வயதில் ஒரு பேத்தி இருக்கிறாள். அவளுக்கு ஒபாமாவின் வெற்றி குறித்து அறியும் பக்குவம் தற்போது இல்லை என்பதால், இன்றைய நாளிதழில் வந்துள்ள செய்தியை அவளுக்காக பத்திரப்படுத்தி வைக்க விரும்பினேன். ஆனால் நாளிதழ்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்.

இதேபோல் அந்நாட்டின் முன்னணி பத்திரிக்கையான “நியூயார்க் டைம்ஸ ் ” வழக்கமாக அச்சிடும் நாளிதழ்களின் எண்ணிக்கையை, 35% கூடுதலாக அச்சடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Show comments