Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பூகம்ப ப‌லி எண்ணிக்கை 300 ஆக உயர்வு!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (00:16 IST)
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை, 300-ஐ தாண்டி விட்டது. இத்தகவலை, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜியாரத் மாவட்ட மேயர் திலவர்கான் காகர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ப‌லி எண்ணிக்கை 400-க்கு மேல் இருக்கும் என்று கிராம மக்கள் கூறினர். மீட்பு பணி இன்னும் முடிவடையாததால், ப‌ல ி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இ‌ந்த பூக‌ம்ப‌த்தா‌ல் ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு இழந்து தவித்து வருகின்றனர். 10 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

உலக சுகாதார நிறுவனம், மருந்துகள் மற்றும் 700 டன் உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளன. 44 தடவை, பின்அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments