Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. தலைமைச் செயலர் இந்தியா வருகை!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (12:25 IST)
ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூன் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்களை பான் கி மூன் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின் போது, சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கல், தட்பவெப்ப நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சர்வதேச தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்கா கூட்டியுள்ள நிலையில், பான் கி மூன் புதுடெல்லி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

Show comments