Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா கட்சி அலுவலகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (01:26 IST)
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள கருணா‌வி‌ன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் புகுந ்து, அ‌ங்‌கிரு‌ந்த நா‌ன்கு பேரை சு‌‌ட்டு‌க்கொ‌ன்றது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு பகுதி தளபதியாக இருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2004-ம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து விலகினார்.

‌ பி‌‌ன்ன‌ர் ` தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பை தொடங்கி இராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். பிறகு, இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறி, கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

இக்கட்சியைச் சேர்ந்த பிள்ளையான், கிழக்கு மாகாண முத லமை‌ச்சராக பதவி வகித்து வருகிறார். கருணாவுக்கு இலங்கை அரசு நியமன எம்.பி. பதவி வழங்கி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் புகுந் தது, அ‌ங்கு‌ள்ளவ‌ர ்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் 4 பேர் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள். தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த 5 பேரை காணவில்லை. அவர்களை மர்ம கும்பல் கடத்திச் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments