Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமன் வெள்ளம்: 90 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (14:05 IST)
சானா: ஏமன் நாட்டில் அடித்த புயல ் காற்றால் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு சுமார் 90 பேர் பலியாகினர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் காற்றால் தெற்கு ஏமன் பகுத்யில் கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், இதில் சுமார் 90 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த நாட்டு காவல்துறை கூறியுள்ளது. மேலும் 20,000 பேர் வீடு, வாசல்களை இழந்துள்ளதாக ஐ.நா. உணவுத்திட்ட அமைப்பு கூறியுள்ளது.

புயலால் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்ப்ட்டிருப்பதால், நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சாலைகளை அடித்துச் சென்றுள்ளதால் நிவாரணமின்றி மக்கள் அவதியுறுவதாக் ஐ.நா. உணவுத்திட்ட அமைப்பு கூறியுள்ளது.

பலவீடுகள் இப்பகுதியில் களிமண் - செங்கல் கலவையால் கட்டப்பட்டுள்ளதால் சேதம் பல மடங்கு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் அலி அப்டுல்லா சாலே நாட்டு மக்களையும், தனியார் நிறுவனங்களையும் பண உதவி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

பல பகுதிகளில் நிவாரணப்பணிகள் மந்த நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments