Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு புஷ் வாழ்த்து!

Webdunia
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PTI PhotoFILE
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை தீபாவளி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்கா முழுவதும் இருந்து சுமார் 100 இந்தியர்கள் பங்கேற்றனர். அமெரிக்க வணிகத்துறை அமைச்சர் கார்லோஸ் கலந்து கொண்டு இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

அதிபர் புஷ் வெளியிட்ட செய்தியில ், தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளில் இந்தியர்கள் மேலும் செழித்தோங்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.

இருநாடுகளும் மத சுதந்திரத்தையும ், ஜனநாயகத்தையும் கட்டிக் காப்பாற்றுவதாகவும ், இந்த நன்னாளில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய தூதரக மூத்த அதிகாரி ஆர்த்தி கிருஷ்ணா விழாவில் பேசுகையில், கடந்த காலத்தை விட தற்போது அமெரிக்காவும ், இந்தியாவும் மிகவும் நெருங்கி வந்திருப்பதாக குறிப்பிட்டார்.

பிரிட்டனில் விழா: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

இந்தியத் தூதர் சிவசங்கர் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments