Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கனில் 55 தீவிரவாதிகள் பலி: யு.எஸ் ராணுவம்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (04:16 IST)
ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் சர்வதேச படைகளுடன் இணைந்து அந்நாட்டுப் ராணுவம் நடத்திய தாக்குதலில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படை மற்றும் அதன் கூட்டு படைகள் துப்பாக்கிச்சூடு, சிறிய ரக ராக்கெட் குண்டுகள் வீசி தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்கியதில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கனில் உள்ள அமெரிக்க படை கூறியுள்ளது.

முன்னதாக, உருஸ்கான் மாகாணத்தில் தாக்குதல் நடத்த முயன்ற 100க்கும் அதிகமான தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து அந்நாட்டு காவல்துறை போராடியதாகவும், இதில் 35 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் அம்மாகாண காவல்துறை தலைவர் ஜுமா குல் ஹீமத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த தலிபான்கள், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாய் அரசை கவிழ்க்க தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments