Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் இணைப்பு மேம்படுத்த இந்தியா-பாக். திட்டம்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (16:14 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ரயில்வே போக்குவரத்து மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் விவாதித்துள்ளனர்.

இருநாட்டு எல்லைப்பகுதியில் உள்ள வாகாவில் நேற்று நடந்த கூட்டத்தில் பெரோஸ்பூர் பிரிவு ரயில்வே மேலாளர் சதீஷ்குமார் தலைமையிலான இந்தியக் குழுவினரும், லாகூர் ரயில்வே பிரிவு மேற்பார்வையாளர் முபீனுதின் தலைமையிலான பாகிஸ்தான் அதிகாரிகள் குழுவும் பங்கேற்றுப் பேசினர். இதில் ரயில்வே போக்குவரத்து, இயக்கம், வர்த்தகம் தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகாவில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர பிரச்சனைகளை களையவும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுநடத்தியதாக கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

Show comments