உலகின் பல்வேறு கண்டங்களில் நிலவும் சர்வதேச பிரச்சனைகளை தீர்க்க கடந்த 30 ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொண்ட நார்வே நாட்டைச் சேர்ந்த மார்ட்டி ஹடிசாரியின் சேவையைப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக்குழு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கியுள்ளது.
webdunia photo
FILE
சமூக சேவையில் உயர்பதவி வகித்த மார்ட்டி, தனது இளமைக் காலத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து உலகின் அமைதி, நிலைத்தன்மை உறுதிப்படுத்த பணியாற்றி உள்ளார்.
கடந்த 20 ஆண்டு காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் நீண்டகால மற்றும் தீவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண அந்நாட்டு அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு மார்ட்டி துணை நின்றுள்ளார்.
கடந்த 1989-90இல் நமீபியாவின் விடுதலைக்கு பாடுபட்டது, 2004இல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது, 1999 மற்றும் 2005-07இல் கொசோவாவில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு அளிக்கும் நடவடிக்கைக்கு பாடுபட்டது, ஈராக் பிரச்சனைகளுக்கு அமைதி தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டது உள்ளிட்ட பணிகளின் மூலம் உலகின் பல்வேறு கண்டங்களில் அமைதியை நிலைநிறுத்த மார்ட்டி முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி மத்திய ஆசியாவில் உள்ள வடக்கு அயர்லாந்து மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட முரண்பாடான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண மார்ட்டி நடவடிக்கை மேற்கொண்டார்.
சர்வதேச அரசியலில் உலக நாடுகளுக்கிடையே நல்லெண்ணத் தூதர் போன்று பணிபுரிந்துள்ள மார்ட்டியின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாகவே அவருக்கு 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு அறிவிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவரது சாதனைகளும், முயற்சிகளும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்றும் அக்குழு கூறியுள்ளது.