Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ளிஹார் அணை பிரச்சனை: அக்23 இந்தியா பாகிஸ்தான் பேச்சு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (14:01 IST)
ஜம்மு-காஷ்மீரில் சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணையின் காரணமாக தங்கள் நாட்டிற்கு வரவேண்டிய நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதென பாகிஸ்தான் அரசு குற்றம் சாற்றியுள்ளது.

ஜம்முவில் தோடா மாவட்டத்தில் சந்திரகோட் அருகே சீனாப் நதியின் மீது 450 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க பக்ளிஹார் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் மின் நிலைய அணையில் இந்தியா தண்ணீர் தோக்கிவருவதால், சீனாப் நதியில் தங்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பெரும் பாதி்ப்பிற்குள்ளாகி வருகிறுது என்று கூறியுள்ள பாகிஸ்தான், தங்களுக்கு நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இது இருநாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள பாகிஸ்தான், இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விவசாய உற்பத்தி இழப்பின் மதிப்பு 40 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) ரூபாய் என்று கூறியுள்ளது.

ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் சீனாப் நதியில் நொடிக்கு 55,000 கன அடி நீர் வரத்தை இந்தியா உறுதி செய்யவேண்டும். ஆனால், பாகிஸ்தான் 20,000 கன அடி அளவிறகுத்தான் நீர் பெற்றுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் பக்ளிஹார் அணையை நேரில் பார்வையிட, பாகிஸ்தான் நீர்வள ஆணையத்தின் செயலர் சையது ஜமாத் அலி ஷா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அக்டோபர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பார்வையிடுகிறது. அதன் பிறகு இந்திய நீர்வள ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்பிரச்சனையில் தீர்வு அளிக்குமாறு கோரி உலக வங்கியை அணுகுவதெனவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பக்ளிஹார் அணையில் 150 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் ஒரு மின் நிலையத்தை திறந்துவைத்து, அதனை இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments